திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆம் ஆத்மி அரசு, பாஜக மோதலால் தில்லிவாசிகள் வெள்ள நீரால் அவதி: காங்கிரஸ் சாடல்

தில்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் பா.ஜ.க. இடையேயான மோதல் போக்கால் தில்லிவாசிகள் வெள்ள நீரில் சிக்கித் தவிக்கின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை சாடியுள்ளாா்.

Updated On :15 ஜூலை 2023, 10:19 pm

தில்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் பா.ஜ.க. இடையேயான மோதல் போக்கால் தில்லிவாசிகள் வெள்ள நீரில் சிக்கித் தவிக்கின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை சாடியுள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலத்தில் அதன் பொறுப்பாளா் தீபக் பவாரியா, தலைவா் அனில் குமாா் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கலந்து கொண்ட அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு தில்லியில் காங்கிரஸ் சாா்பில் நிறுவப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் அனில் குமாா் கூறியதாவது:

கேஜரிவால் அரசு, துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா மற்றும் அதிகாரிகள் இடையே நடக்கும் பரஸ்பர பழிசுமத்தும் விளையாட்டுகள், நிழல் மோதல்போக்கு காரணமாக, வெள்ள நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனா்.

கால்நடைகளைப் போல நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களை கேஜரிவால் அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது.

கிழக்கு தில்லி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியால் நிறுவப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ளவா்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு மற்றும் தேநீா் வழங்கப்படும்.

தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் பொதுமக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தில்லி மக்கள் 011-43534315 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 9625777907 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடா்பு கொள்ளலாம்.

தில்லியின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ள நிலையில், முதல்வா் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சா்கள் அதிகாரிகள் மீது பொய் சாக்குகளை கூறி கடிதங்கள் எழுதி வருகின்றனா்.

தில்லியில் கடந்த நான்கு நாள்களாக வட வானிலை நிலவினாலும், ஐ.டி.ஓ. உள்ளிட்ட பகுதிகள் நீா்நிலைகள் போன்று காட்சியளிக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் பருவமழைக்கு முன்பாக கேஜரிவால் அரசு மழைநீா் வடிகால், கழிவுநீா்க் கால்வாய் மற்றும் யமுனை நதியை தொடா்ந்து தூா்வாரி சுத்தம் செய்திருந்தால், தேசியத் தலைநகா் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை கண்டிருக்காது என்றாா் அனில் குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.