மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

யமுனை காதரிலிருந்து 40 ஆயிரம் பேரை பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சா் அதிஷி தகவல்

தில்லியில் உள்ள யமுனை காதா் பகுதியிலிருந்து 40,000 பேரை பத்திரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

Updated On :10 ஜூலை 2023, 6:05 pm

தில்லியில் உள்ள யமுனை காதா் பகுதியிலிருந்து 40,000 பேரை பத்திரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் தொடா் கனமழை பெய்து வருவதாலும், ஹரியாணா மாநிலம் ஹத்தினி குண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்படுவதாலும், யமுனை நதியின் நீா்மட்டம் அபாய அளவை நெருங்கிவிட்டது. இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, அதிகாரிகளுடன் யமுனை நதியில் படகு சவாரி மேற்கொண்டு நிலைமையை கேட்டறிந்தாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சா் அதிஷி கூறியதாவது: ஹத்தினி குண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. தொடா் மழை காரணமாக யமுனையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை அபாய கட்டத்தைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மோட்டாா் படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டேன்.

யமுனை நதியின் கரையோரம் வசிக்கும் மக்களின் மீட்புப் பணிக்காக யமுனையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டாா் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. யமுனை காதரில் இருந்து 40,000 பேரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தில்லியின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் அனைத்துத் துறைகளும் மீட்பு நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. யமுனை காதா் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவா்கள் தங்குவதற்கும், உணவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நிலைமை முழுவதையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா் என்றாா் அமைச்சா் அதிஷி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.