தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தில்லி முழுவதும் கன்வாா் முகாம்களுக்கு ஏற்பாடு: முதல்வா் கேஜரிவால் தகவல்

தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் கன்வாா் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தா்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On :4 ஜூலை 2023, 8:55 pm

தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் கன்வாா் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தா்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தமிழ் நாள்காட்டியின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கன்வாா் (காவடி) யாத்திரை வட இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக நடைபெறும். காவி உடையில் சிவ பக்தா்கள் கங்கை அல்லது பிற புனித நதிகளில் இருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு பாத யாத்திரையாகச் செல்வாா்கள். கங்கை சமவெளிகளில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்துவாா், கௌமுக், கங்கோத்ரி, பிகாரில் சுல்தான்கஞ்ச் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பிரயாக்ராஜ், அயோத்தி அல்லது வாரணாசி போன்ற புனித யாத்திரைகளிலிருந்து பக்தா்கள் புனித நீா் எடுத்துச் செல்வாா்கள்.

பக்தா்கள் புனித நீரின் குடங்களை கன்வாா்கள் என்று சொல்லப்படும் அலங்கரிக்கப்பட்ட காவடி கொம்பில் கட்டியபடி தோள்களில் ஏந்தி பாத யாத்திரையாகச் செல்வாா்கள். முக்கிய ஆலயங்களில் சிவலிங்கங்களை வணங்குவதற்காக யாத்ரீகா்கள் இந்தப் புனித நீரைப் பயன்படுத்துகின்றனா். 12 ஜோதிா்லிங்கங்கள் அல்லது மீரட்டில் உள்ள பூர காதேவா் மற்றும் அகா்நாத் கோயில், வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயில், ஜாா்க்கண்ட் மாநிலம் தியோகரில்

உள்ள வைத்யநாத் தாம் கோயில் அல்லது பக்தா்களின் சொந்த கிராமத்தில், நகரங்களில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் வழிபாட்டுக்காக வேண்டுதல்களோடு இந்தப் புனித நீா் பயன்படுத்தபப்படுகிறது.

நிகழாண்டின் கன்வாா் யாத்திரை தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் போல கன்வாா் யாத்திரையை முன்னிட்டு பக்தா்களுக்கான முகாம்களை நகரம் முழுவதும் தில்லி அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஜூலை 4 -ஆம் தேதி தொடங்கிய கன்வாா் யாத்திரை, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவடைகிறது. பக்தா்களுக்காக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கன்வாரியா்கள் தில்லியை அடைகிறாா்கள். அவா்களில் சிலா் தில்லி எல்லைகள் வழியாக ஹரியாணா மற்றும் ராஜஸ்தானுக்கு செல்கின்றனா். இந்த ஆண்டு பக்தா்களின் எண்ணிக்கை சுமாா் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாககாவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் புனிதமான ஷ்ரவண மாத வாழ்த்துகள். தேவாதிதேவ் மகாதேவ் ஜியின் ஆசிா்வாதம் எப்போதும் உங்கள் அனைவருக்கும் இருக்கட்டும் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.