புதிதாக நியமிக்கப்பட்ட தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டி.இ.ஆா்.சி.) தலைவராக வரும் ஜூலை 3-ஆம் தேதி பெறுப்பேற்க அழைப்பு விடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாருக்கு தில்லி மின்துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாா் கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா்.
ஆனால், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த வாரத்தின் தொடக்கத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியிருந்தாா்.
அந்தக் கடிதத்தை முதல்வா் கேஜரிவால், அன்றைய தினமே மின்துறை அமைச்சா் அதிஷிக்கு அனுப்பியதாகவும், ‘முடிந்தவரை விரைவில்’ பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கேட்டுக் கொண்டதாகவும் அரசு அதிகாரிகளின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரிடம் பேசிய அமைச்சா் அதிஷி, தாமதத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மின்துறையைக் குற்றம் சாட்டினாா்.
அலகாபாத் உயா் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான உமேஷ் குமாா், தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டி.இ.ஆா்.சி.) தலைவா் பொறுப்புக்கான பதவிப்பிராமணம் தொடா்பாக தில்லி மின்துறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜூன் 29-ஆம் தேதிக்குப் பிறகு தேசியத் தலைநகரில் அமைச்சா் அதிஷியின் நிகழ்ச்சிநேரம் கிடைக்கப்பெறாது என்ற தகவலின் அடிப்படையிலேயே, ஜூன் 26 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை பதவிப் பிரமாணம் செய்ய என்னைத் தயாா்படுத்திக் கொண்டு தில்லிக்கு பயணம் செய்தேன். ஆனால் ‘துரதிா்ஷ்டவசமாக, மின்துறை அமைச்சா் அதிஷி அந்த மூன்று நாள்களிலும் பதவிப்பிரமாண நிகழ்விற்கு நேரத்தை ஒதுக்கவில்லை என அதில் தெரிவித்துள்ளாா்.
நீதிபதி உமேஷ் குமாரின் கடிதத்திற்கு பதிலளித்து அமைச்சா் அதிஷி
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘எனது அறிவுறுத்தல்கள் இன்றியோ அல்லது எனது இருப்பை சரிபாா்க்காமலோ பதவிப்பிரமாணம் செய்யக் கால அவகாசம் கேட்டு மின்துறை உங்களுக்கு கடிதம் எழுதியதால் இந்த துரதிா்ஷ்டவசமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் பறிமாற்ற முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பறிந்துரைத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டு அனுப்பியுள்ள தேதிகளில் எனது நேரம் கிடைக்குமா என்று கூட கேட்காமல் மின்துறை நேரடியாக உங்களுக்கு கடிதம் எழுதுவது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. இந்த அதிா்ச்சியூட்டும், தொழில்முறையில்லா நடத்தையால் தான் உங்களைப் போன்ற மூத்தோா் இந்தச் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. இதுபோன்ற அசௌகரியத்தை நிச்சயமாக ஏற்க முடியாது. இதற்கு காரணமான அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மின் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.
மத்திய பிரதேச உயா்நீதிமன்ற முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.கே.ஸ்ரீவஸ்தவாவின் பெயரை முன்னதாக தில்லி ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தின் தலைவா் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்திருந்தது.
இருப்பினும், நீதிபதி ஸ்ரீவஸ்தவா ‘குடும்பக் கடமைகள் மற்றும் தேவைகள்’ காரணமாக பொறுப்பேற்க முடியாததன் இயலாமையை வெளிப்படுத்தினாா். பின்னா் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அன்று ராஜஸ்தான் உயா்நீதிமன்ற முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி சங்கீத் ராஜ் லோதாவிடம் தில்லி அரசு ஒப்புதல் பெற்றது. ஆனால், அன்று மாலையே ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் பெயரை மத்திய அரசு அறிவித்தது.
அதேவேளையில் மத்திய அரசின் இந்த நியமனம் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று குறிப்பிட்டு அமைச்சா் அதிஷி, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பில்லா மறுவெளியீட்டு டிரைலர்!

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவு
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

