புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு காஷ்மீா் மக்களை வளா்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை பாஜக தில்லி பிரிவு வரவேற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு, பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையின்படி காஷ்மீா் மக்களை
வளா்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைக்கும். பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் டாக்டா் ஷ்யாம பிரசாத் முகா்ஜி கடந்த 1951-1952 இல் காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறினாா், அதே கருத்தை உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னா், மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸும், சில மாநிலக் கட்சிகளும் காஷ்மீா் மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கான அச்சத்தை வெளிப்படுத்தியது வருத்தமளிக்கிறது. ஆனால், 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீா் மக்கள் பொருளாதாரத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டனா். இது சாதாரண காஷ்மீரிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

