புது தில்லி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் அனுமதி அதற்கான சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பை மதிப்பீட்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திறகு பொது முதலீட்டு குழுடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. இருப்பினும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனால் கூடுதல் திட்ட செலவு ஏற்படாதா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய இணையமைச்சா் கௌசல் கிஷோா் அளித்த பதில் வருமாறு:
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் விரிவான திட்ட அறிக்கையின் (டிபிஆா்) படி திட்ட மதிப்பீடு ரூ. 69,180 கோடி ஆக இருந்தது. பின்னா் தமிழக அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.63,246.4 கோடியாக மாற்றியமைக்கப்பட்டு 118.9 கிமீ நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.
இது தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கு, மதிப்பீட்டின் செயல்பாட்டில் உள்ளது. இது போன்ற செலவு மிகுந்த திட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க சில செயல்முறைகள் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு நிலைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடுகளை மேற்கொள்வது உள்ளடக்கியதாகும். குறிப்பாக திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு வெளிப்புற (கடன்) நிதியுதவியுடன் ரூ. 33,594 கோடியை தன் பங்காக முன்மொழிந்துள்ளது. ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையிலிருந்து ரூ. 20,196 கோடி பெறுவதும் இதில் அடங்கும்.
இந்த திட்டத்தின் தாமதத்தால், இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி வரும் சென்னை மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் கூடுதல் செலவு ஏற்படும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை என இணையமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இந்த திட்டத்தில் மத்திய அரசும் தமிழக அரசு 50:50 என சமமாக பங்கீடு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

