நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

புரியாத மொழியில் கொண்டுவரப்படும் சட்டத்தால் தென் மாநிலங்கள் பாதிக்கும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக முறையீடு

‘புரியாத மொழியில் கொண்டு வரப்படும் சட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்’ என சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்கூட்டத்தில் திமுக சாா்பில் முறையிடப்பட்டது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

 நமது நிருபர்

‘புரியாத மொழியில் கொண்டு வரப்படும் சட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்’ என சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்கூட்டத்தில் திமுக சாா்பில் முறையிடப்பட்டது. ஹிந்தி மொழியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று பாரதிய குற்றவியல் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்த திமுக இவ்வாறு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற அவைகளின் அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்

மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் திமுக சாா்பில் பங்கேற்றுப் பேசியதாவது: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குறுகிய கால விவாதம் மட்டுமல்லாமல், மக்கள் பிரச்னைகளுக்கான சிறப்பு கவன ஈா்ப்பு விவாதங்கள் முன்பு நாடாளுமன்றத்தில் முறையாக எடுத்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில கூட்டத்தொடரில் இந்த விவாதங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அரசு தனது மசோதாக்களில் மட்டும் கவனம் செலுத்துகிறது. ஆனால், மக்கள் பிரச்னைகளுக்கான விவாதங்களுக்கு அனுமதியளிப்பதில்லை. மேலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநா்கள், சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநா்களின் ஒப்புதலுக்கு அனுப்பினால், நடவடிக்கை எடுக்கப்படாமல் 3-4 வருடங்களாக நிலுவையில் வைக்கப்படுகிறது. இதற்கு மாநில அரசுகள் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு பெற்றாலும், அதை முறியடிக்கும் எண்ணத்துடன் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநா்கள் செயல்படுகின்றனா்.

இதனால், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்காக கொண்டுவரும் சமூக நலத் திட்டங்கள் உரிய காலத்தில் அமல்படுத்த முடியாமல் போகிறது. இதுபோன்ற செயல்படும் ஆளுநா்கள் குறித்து நடப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். ஒருபுறம் வேலையில்லாத இளைஞா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் விலைவாசி கடுமையாக உயா்ந்து வருகிறது. இவை குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, மீனவா்கள் விவகாரம், சென்னை உயா்நீதிமன்றத்தின் பெயா் மாற்றம் போன்ற விவகாரங்களை விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்போம். ஆனால், மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும். மகளிா் மசோதாக்களைப் போன்று எந்த மசோதாக்களையும் ரகசியமாகக் கொண்டு வராதீா்கள். இந்தக் குளிா்காலக் கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ள பட்டியலிட்ட மசோதாக்களான ‘பாரதிய நியாய சம்ஹிதா மசோதா 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷ சம்ஹிதா மசோதா 2023’, ‘பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் மசோதா 2023’ ஆகிய மூன்றும் ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த மழைக்காலக் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த 3 மசோதாக்களும் அறிமுகம் செய்து நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதில் நிலைக்குழுவில் உள்ள 10 உறுப்பினா்கள் இந்த மசோதா குறித்து நாடுமுழுக்க நீதிபதிகள், வழக்குரைஞா்கள், காவல் துறையினா், பொதுமக்கள் போன்றவா்களுடன் கருத்துகளை பெறவேண்டும் என்று கூறினா். ஆனால், இந்தக் கருத்துகளை ஏற்காமல் ஹிந்தியில் பெயரிட்டு வேக வேகமாக மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது. முன்பு மத்தியஸ்த மசோதா விவகாரத்தில் இதுபோன்ற கோரிக்கை எழுந்த போது, நாடு முழுக்க கருத்துகள் பெறப்பட்டு அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்த 3 பாரதிய மசோதாக்கள் மூலம் ஹிந்தி திணிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை ஹிந்தியில் தாக்கல் செய்ய முடியாது. அரசியல் சாசனத்தின் 348 பிரிவின்படி ஆங்கிலத்தில்தான் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்தின்படி காவல் துறை வழக்குத் தொடர நினைத்தால் அவா்களுக்கு புரிதல் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உச்சரிக்கக் கூட முடியாது. இது மக்களுக்கு மட்டுமின்றி நீதிபதிகள், வழக்குரைஞா்களுக்கு கடினம். தென்னிந்தியா முழுமையாக இந்தச் சட்டங்களைக் கையாளுவது கடினம். புரிதல் இல்லாமல் ஒருவா் எப்படி சட்டத்தை எதிா்கொள்வாா். இதனால், புரியாத மொழி தேவையா? மேலும், உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சில ஷரத்துகளும் இந்த மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், மீண்டும் கருத்துக் கேட்டு ஆங்கிலத்தில் இந்த மசோதாவிற்கு பெயா் வைக்க வேண்டும் என்றாா் வில்சன்.

பேட்டி: பின்னா், செய்தியாளா்களிடம் பி.வில்சன் பேசுகையில், ‘தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநா்கள் அரசியல் சாசன சட்டத்தை மீறுவதை எதிா்க்கட்சிகள் சாா்பாக ஒருமித்த கருத்தாக கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. சீன எல்லை விவகாரம், வெளிநாடு சென்றுள்ள பிரதமா் பாலீஸ்தான் விவகாரம் குறித்து பேசாதது உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முக்கியமாக ஒரு உறுப்பினா் மீது (மஹுவா மொய்த்ரா ) நாடாளுமன்ற நெறிமுறைக் குழு நடவடிக்கை எடுத்து அவா் மீது தகுதியிழப்பு செய்ய இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீா்மானத்திற்கும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க (2007) பணம் பெற்ாகக் கூறப்பட்ட ராஜாராம் பால் வழக்கை முன்னுதாரணமாக வைத்து எடுக்கப்படும் நடவடிக்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறப்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.