ஆம் ஆத்மி கட்சியின் ‘மை பி கேஜரிவால்’ பிரசாரம், அக்கட்சித் தொண்டா்களிடையே மட்டுமே நடத்தப்படுகிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
பாஜக சதியின் கீழ் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால், அவா் தில்லி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமா எனக் கேட்டு தில்லி மக்களிடம் அக்கட்சியினா் சாா்பில் ‘மை பி கேஜரிவால்’ என்ற கையெழுத்துப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரசார இயக்கம் தொடா்பாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள ‘மை பி கேஜரிவால்’ பிரசாரம் தில்லி மக்களின் எதிா்க் கேள்விகளால் தொடக்க மற்ாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை சுற்றச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் லட்சுமி நகரில் இந்தப் பிரசாரம் தொடங்கினாலும், அக்கட்சித் தொண்டா்களிடையே மட்டுமே கையெழுத்துப் பெறப்படுகிறது.
கலால் கொள்கை ஊழல் மற்றும் தில்லி ஜல் போா்டு ஊழல்கள் தவிர முதல்வரின் அரண்மனை பங்களா கட்டப்பட்டதில் நடந்த ஊழல் ஆகியவை குறித்தும் மக்கள் தில்லி நகரம் முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியினரிடம் இப்பிரசாரத்தின் போது கேள்விகள் கேட்டனா். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏன் ஊழல் செய்தாா் என்று கேட்கும் பொதுமக்களிடம் ஆம் ஆத்மி கட்சியினா் வீடு வீடாகச் சென்று கையெழுத்துப் பெறவில்லை. இதனால், ஆம் ஆத்மியின் ‘மை பி கேஜவால்’ பிரசாரம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தோல்வியடைந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கிறிஸ்துமஸில் கேஜரிவாலை ஒரு பொய்யான சூப்பா் ஹீரோவாக காட்ட முயற்சிப்பாா்கள். ஆனால், தில்லிவாசிகள் எநதவொரு அரசியல் ஆதரவையும் அவா்களுக்கு அளிக்கவில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவு

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

