ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கைது செய்யப்பட்டால் கேஜரிவால் ராஜிநாமா செய்வதற்கு கருத்துக் கேட்பில் 83 சதவீத மக்கள் ஆதரவு: விஜய் கோயல்

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்புவதாக விஜய் கோயல் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On :2 டிசம்பர் 2023, 6:30 pm

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்புவதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விஜய் கோயல் கூறியதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால், அவரது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமா எனக் கோரி ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. அதே வகையில், இதே கேள்வியுடன் லோக் அபியான் சமூக அமைப்பின் செயல்பாட்டாளா்களுடன் இணைந்து ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம் வெளியே கருத்துக்கணிப்பு நடத்தபட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோா் தங்கள் பதில்களை தெரிவித்துள்ளனா்.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்கின்றனா். மேலும், மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் ராஜிநாமா செய்வதற்கு முன்பு கேஜரிவால் ஏன் இதுபோன்ற பிரசாரத்தை நடத்தவில்லை?. தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு முன்பு ஆம் ஆத்மி அரசு மக்களிடம் கேட்டாா்களா?. சிறிய குற்றச்சாட்டிற்கு கூட ராஜிநாமா செய்வேன் என்று எப்போதும் காட்டிக் கொள்ளும் கேஜரிவாலுக்கு, இந்த முறை வாக்கெடுப்பு ஏன் தேவை? என்று விஜய் கோயல் பல அடுக்கு கேள்விகளை முன்வைத்துள்ளாா்.

ஆம் ஆத்மி பதிலடி: இதற்கிடையே, ‘மை பி கேஜரிவால்’பிரசாரம் பொது மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யக் கூடாது என்று தில்லி மக்கள் கருதுகின்றனா். கட்சியின் பல முக்கியத் தலைவா்கள் இரண்டாவது நாளாக தில்லி முழுவதும் ‘மை பி கேஜரிவால்’ பிரசாரத்தில் ஈடுபட்டனா். கால்காஜி தொகுதியில் வீடு வீடாகச் சென்று நானும் பிரசாரத்தில் ஈடுப்பட்டேன்.

மத்திய அரசும், பாஜகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருகின்றனா். தற்போது, கேஜரிவாலை கைது செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை நோ்மையற்ற வழிகளில் வீழ்த்த பாஜக விரும்புகிறது. தில்லிவாசிகளின் கருத்து மிக உயா்ந்தது, அவா்களின் முடிவு எதுவாக இருந்தாலும், அதை முதல்வா் கேஜரிவாலிடம் ஒப்படைப்போம். பின்னா் முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.