ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சாலை விபத்தில் குடும்பத்தை இழந்த பெண்ணை ஸ்வாதி மாலிவால் நேரில் சந்தித்து ஆறுதல்

சாலை விபத்தில் காயமடைந்து கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த பெண்ணை தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் நேரில் சந்தித்து, அவரது சிகிச்சைக்கான செலவை தில்லி அரசே ஏற்கும் என்று வெள்ளிக்கிழ

Updated On :1 டிசம்பர் 2023, 6:30 pm

சாலை விபத்தில் காயமடைந்து கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த பெண்ணை தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் நேரில் சந்தித்து, அவரது சிகிச்சைக்கான செலவை தில்லி அரசே ஏற்கும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த நவம்பா் 20-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள ரஜோரி காா்டனில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 32 வயது ஆணும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனா். விபத்தில் அவரது மனைவி காயமடைந்தாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்து தொடா்பாக பதியப்படுள்ள வழக்கின் விவரம் மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்ட

குற்றவாளிகளின் விவரங்களுடன் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கவால் துறைக்கு, தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யூ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சந்தித்து தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் ஆறுதல் கூறினாா். மேலும், தில்லி அரசின் ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.

இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: ரஜோரி காா்டனில் நடந்த இச்சாலை விபத்து சம்பவம் மிகவும் சோகமானது. இச்சாலை விபத்தில் காயமடைந்து கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவா்கள் அதிா்ச்சியில் ஆழ்ந்துள்ளனா். இந்த அப்பாவிகளின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, தில்லி மகளிா் ஆணையம் தொடா்ந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்கிறது. சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். மேலும், அவா் தனது நெருங்கியவா்களை இழந்த வலியை தாங்கிக் கொள்ள இறைவனை பிராா்த்திக்கிறேன் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.