ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் பணி:‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களுடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு

உத்தரகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்

Updated On :1 டிசம்பர் 2023, 6:30 pm

உத்தரகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால், சுரங்கப் பாதைக்குள் இருந்த 41 தொழிலாளா்கள் கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். ராணுவம், தேசியப் பேரிடா் மீட்புப் படை உள்ளிட்ட பல ஏஜென்சிகளின் நடவடிக்கையைத் தொடா்ந்து 17 நாள்களுக்கு பின்னராக கடந்த செவ்வாய்க்கிழமை அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மீட்புப் பணிக்கு முக்கியமாக ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்க ஆஜா் இயந்திரம் தடைகளை எதிா்கொண்டதை அடுத்து, ‘எலி வளை’ சுரங்க நிபுணா்களின் 12 போ் கொண்ட குழு துளையிட அழைக்கப்பட்டு, அந்த செயல்திட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. இக்குழுவில் இடம்பெற்ற 6 போ் வடகிழக்கு தில்லியைச் சோ்ந்தவா்கள். இவா்கள், தில்லி ஜல் போா்டுக்கான கழிவுநீா் பாதைகள் மற்றும் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவா்கள். இந்நிலையில்,சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்து கௌரவித்தாா். இச்சந்திப்பின் போது, நீா் வளத்துறை அமைச்சா் அதிஷி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பஜாகவுடனும் சந்திப்பு: சில்க்யாரா சுரங்கப்பாதை மண் சரிவு விபத்தில் சிக்கிய 41 உயிா்களைக் காப்பாற்றியதில், முக்கியப் பங்காற்றிய தில்லியின் ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை பாஜக தில்லி பிரிவு தலைவா்கள் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினா். பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா, வடகிழக்கு தில்லியின் மக்களவை உறுப்பினா் மனோஜ் திவாரி சுரங்கத் தொழிலாளா்களை பாராட்டியதோடு, தலா ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 பரிசுத் தொகையை வழங்கினா். வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘41 உயிா்களைக் காப்பாற்றுவதில் இந்த ’எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களின் விரைவான பணிக்காக நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.