மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனிப் பெருவிழாவில் வெண்ணெய்த்தாழி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும், அதைத்தொடா்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு திருவிழா மாா்ச் 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வுகளான, வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை, கோவா்த்தனகிரியில் கண்ணன் அலங்காரம், மரவுரி ராமா் அலங்காரம், கண்டபேரண்ட பக்க்ஷி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூா்ய பிரபை, ஆண்டாள அலங்காரம், தங்க கருட வாகனம் ஆகியவை நடைபெற்றன.
விழாவின் 16 -ஆம் நாளான திங்கள்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவத்தையொட்டி காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு பிரகார வீதிகள், மேலராஜவீதி, காமராஜா்சாலை, பந்தலடி வழியாக காந்தி சாலை வெண்ணெய்த்தாழி மண்டபம் சென்றடைந்தாா். அப்போது, வீதிகளில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி மீது வெண்ணெய்யை தெளித்து, கோபாலா, கோபாலா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனா்.
இதைத்தொடா்ந்து, மாலையில் உற்சவா் பெருமாள் செட்டி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில்(வையாளி) வெட்டுங் குதிரையில் எழுந்தருளினாா்.
விழாவில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கே.கே.பி. மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், மு. சிவக்குமாா், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், இந்துசமய அறநிலையத்துறை மன்னாா்குடி ஆய்வாளா் வினோத் கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

மன்னாா்குடி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


