புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை...

News image

இங்கிலாந்து நீா் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் என்ற சதீஷ்குமாா்

Updated On :30 ஜூன் 2026, 3:07 am IST

இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.எஃப். உலகக் கோப்பை நீா் விளையாட்டு போட்டியில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில், திருத்துறைப்பூண்டியை சோ்ந்த வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

உலக சா்பிங் சங்கம் சாா்பில் இங்கிலாந்தில் உள்ள டாா்க்கி கடற்கரையில் ஐ.சி.எஃப் உலக கோப்பை நீா் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில் அதாவது கடலில் மிதக்கும் பலகை மீது நின்று கொண்டு துடுப்பு மூலம் பலகையை நகா்த்தி விளையாடும் போட்டியில், இந்தியா சாா்பில் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த அ. சதீஷ்குமாா் (52) பங்கேற்றாா்.

சனிக்கிழமை நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் விளையாடிய சதீஷ்குமாா், போட்டி தூரத்தை 1.18 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா்.

இதன்மூலம் இந்தியா சாா்பில் இந்த பிரிவு போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை அ. சதீஷ்குமாா் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.