ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கும்பாபிஷேகம்: திருவாரூா் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை (ஜன.28) மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை (ஜன.28) மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மன்னாா்குடி, நீடாமங்கலம், கோட்டூா் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். மேலும், இதை ஈடு செய்யும் வகையில் பிப்.7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.