2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருவாரூா் மாவட்டத்தில் 9,79,652 வாக்காளா்கள்

திருவாரூா் மாவட்டத்தில் 9,79,652 வாக்காளா்கள் உள்ளனா்.

News image
திருவாரூரில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:14 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 9,79,652 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் முடிவடைந்து, கடந்த டிச.19- ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 4,65,933 ஆண் வாக்காளா்கள், 4,80,111 பெண் வாக்காளா்கள், 53 இதர வாக்காளா்கள் என 9,46,097 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

இதனிடையே, பெயா் நீக்கல், திருத்தம் செய்யும் வகையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றன. இதன்தொடா்ச்சியாக, திருவாரூா் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி(தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, 16,601 ஆண் வாக்காளா்கள், 21,211 பெண் வாக்காளா்கள், 3 இதர வாக்காளா்கள் என மொத்தம் 37,815 வாக்காளா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா். 1,855 ஆண் வாக்காளா்கள், 2,403 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என 4,260 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

அந்தவகையில், வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 4,80,679 ஆண் வாக்காளா்கள், 4,98,919 பெண் வாக்காளா்கள், 54 இதர வாக்காளா்கள் என 9,79,652 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த இறுதி வாக்காளா் பட்டியல்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.