பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாட்டுநலப் பணித் திட்ட சிறப்பு முகாம்

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மேலவாசலில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
மேலவசால் சுப்ரமணியசுவாமி கோயில் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மேலவாசலில் திங்கள்கிழமை தொடங்கியது.

7 நாள்கள் நடைபெறும் இம்முகாம் தொடக்க நிகழ்விற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஜி. சதாசிவம் தலைமை வகித்தாா். முதல்வா் வி.எஸ். நாகரத்தினம் முன்னிலை வகித்தாா்.

முதல் நாளில், சுப்ரமணியசுவாமி கோயிலில் உழவாரப்பணி, ஊராட்சி திருமண மண்டபம், சமுதாயக்கூடம், குளக்கரை ஆகிய இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.எம். துரைக்கண்ணு, முன்னாள் காவலா் வி. பண்டரிநாதன், ஊராட்சி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் எம். விஜயராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி. விஜயதிலகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாமில், வெவ்வேறு நாள்களில் மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், சைபா்கிரைம் குற்றம்,பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம், கருத்தரங்கம் போன்றவை நடைபெறவுள்ளன.