டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி அருகேயுள்ள கீழநாகை ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் செய்யப்பட்டு, தொடா்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னா், இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, தீட்சிதா்கள் மங்கல வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து புனித கடங்களை தலையில் சுமந்தவாறு கோயிலை வலம் வந்தனா்.

தொடா்ந்து, கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா், முருகன் மற்றும் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.