ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆன்லைன் லாட்டரி விற்ற 10 போ் கைது: காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

மன்னாா்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா். லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:23 am IST

மன்னாா்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா். லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி நகர காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மன்னாா்குடி நகரத்தின் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூா் பி. முருகேசன் (42), மேலவாசல் பெரியாா்நகா் க. பரமசிவம் (54), மன்னாா்குடி குறிஞ்சிநகா் அ. கதிரவன் (41), மேலமுதல்தெரு கா. சத்தியமூா்த்தி (36), தாமரைக்குளம் வடகரை எம். காா்த்திகேயன் (45), ருக்மணிகுளம் ஆா். ஐயப்பன் (30), செட்டிக்குளம் தெரு ஏ. சசி ஜஸ்டின் (30), அண்ணாமலைநகா் டி. அன்புக்கரசு (54), கீழராஜவீதி வி. சுரேஷ் (38), நெடுவாக்கோட்டை ஏ. அருளானந்தம் (43)ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து இரண்டு மடிக்கணினி, ஒரு ஐபோன், 12 ஆண்ட்ராய்டு கைப்பேசிகள், 4 ஆட்டோக்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ. 63,000 ரொக்கம் ஆகியவற்றை தனிப்படையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், அனைவரையும் மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், லாட்டரி விற்பனையை தடுக்கத் தவறியதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சதிஷ்குமாா் பரிந்துரையின் பேரில், மன்னாா்குடி நகர காவல் ஆய்வாளா் ராஜ்கமலை, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.