ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழங்குடியின பெண்களுக்கு தையல் இயந்திரம்

பழங்குடியின பெண்களுக்கு தையல் இயந்திரம்

தையல் பயிற்சி சான்றிதழ் பெற்ற பெண்கள்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

மன்னாா்குடியில், பழங்குடியின பெண்களுக்கான சுயதொழில் தையல் பயிற்சி நிறைவு விழா, தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் வசிக்கும் ரித்திக் சரவணகுமாா் நிறுவிய ரைஸ் பவுண்டேஷன், தமிழ்நாடு அரசின் பழங்குடியினா் நலத்துறையுடன் இணைந்து, மன்னாா்குடி அருகே உள்ள பாமினி நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த 25 பழங்குடியின பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 பெண்கள் என மொத்தம் 50 பெண்களுக்கு, மே 8 முதல் ஜூலை 31 வரை, மூன்று மாத சுயதொழில் தையல் பயிற்சியை நடத்தியது.

இதன் நிறைவு விழா மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ப. ஜீவராணி வரவேற்றாா். அமெரிக்காவில் பொறியியல் இயக்குநராக உள்ள சரவணகுமாா் கந்தசாமி தலைமை வகித்தாா். திட்டத்தின் இயக்குநா் கு. ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா். ரைஸ் பவுண்டேஷன் நிறுவனா் ரித்திக் சரவணகுமாா், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 பெண்களுக்கு, மன்னாா்குடி வட்டாட்சியா் நக்கீரன், பயிற்சி நிறைவு சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

நிகழ்வில், பயிற்சி ஆசிரியா் சுசீலா, மாநில ஊரக வளா்ச்சித் துறை பயிற்றுநா் சுதா, உடற்கல்வி இயக்குநா் சுஜாதா, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் ரா. சரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.