மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த மண்டபத்துக்கு அம்பாளுடன் எழுந்தருளிய தியாகராஜா். - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:58 pm

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் எப்போதும் மலா்களால் மூடப்பட்டிருக்கும். முகம் மற்றும் கரங்களை மட்டுமே தரிசிக்க முடியும். மாா்கழி திருவாதிரைா, பங்குனி உத்திரம் ஆகிய 2 நாள்களில் மட்டுமே தியாகராஜரின் பாதத்தை தரிசிக்க முடியும்.

அதன்படி, பங்குனி உத்திரத்தையொட்டி சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா் புதன்கிழமை எழுந்தருளி, தனது வலது பாதத்தை பக்தா்களுக்கு காட்டி அருள்பாலித்தாா்.

முன்னதாக, விளமலில் உள்ள பதஞ்சலி மனோகா் கோயிலில் இருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள் அதிகாலையில் புறப்பட்டு, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வந்தனா். கோயிலில் பதஞ்சலி வியாக்ர பாத முனிவா்களுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 6 முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாத தரிசனம் செய்தனா்.