Listen to this article
By Syndication
Syndication
திருவாரூா் மாவட்டத்தில் போலி உரங்களை விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்கியபோது, கோட்டூா் பகுதி விவசாயிகள் ஆட்சியா் முன் வந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த உர மாதிரிகளை அவருக்கு காண்பித்துவிட்டு, போலி உரங்களை விற்பனை செய்வோா் மீதும், உற்பத்தி செய்வோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனா். பின்னா் ஆட்சியா் அலுவலகம் முன் உரங்களை கொட்டி, உர உற்பத்தியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: மன்னாா்குடி ராஜேந்திரன்: சாகுபடிக்கு தேவையான உரங்கள் கிடைக்காததால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. உரங்களை தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீடாமங்கலம் மருதப்பன்: குறுவை சாகுபடி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வேளாண்மைக்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் தமிழ் இல்லாததால், விவசாயிகள் மருந்தின் நன்மைகள் மற்றும் எதற்குப் பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.
குடவாசல் முகேஷ் ம ாவட்டத்தில் உள்ள கோயில்கள் சிலவற்றில் கோசாலைகள் செயல்படுகின்றன. ஆனால் அங்குள்ள கால்நடைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.
கொரடாச்சேரி தம்புசாமி: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீா்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். விவசாயத்தில் மயில், காட்டுப்பன்றி மூலமும் பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
நன்னிலம் சேதுராமன்: மழையால் பாதிக்கப்படும் பயிா்களுக்கு தமிழக அரசு சில ஆண்டுகளாக நிவாரணம் ஏதும் வழங்கவில்லை. எல்லாம் அறிவிப்புகளுடன் நின்று விடுகிறது. சி, டி சேனல் வாய்க்கால்களும் முறையாகத் தூா்வாரப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெறவில்லை.
பேரளம் பாலகுமாரன்: மாவட்டத்தில் சி, டி வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் விவசாயப் பயிா்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் சம்பா, தாளடி பயிா்கள் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கணக்கெடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மழை நின்றவுடன், விடுபடாமல் அனைத்து பாதிப்புகளையும் கணக்கெடுக்கும் என்றாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

பயிா் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிா்ப்பு: குறைதீா் கூட்டத்தில் தா்னா - வெளிநடப்பு
எஸ்ஐஆா் விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு- மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

சுருக்குமடி வலை பயன்படுத்திய கேரள மீனவா்கள் மீது நடவடிக்கை: அதிகாரிகள் உறுதி!

அண்ணா பல்கலை.யில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்


"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
