சீதளா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் தென்பாதி அருள்மிகு சீதளா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் தென்பாதி அருள்மிகு சீதளா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது
By Syndication
Syndication
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் தென்பாதி அருள்மிகு சீதளா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்தது. பக்தா்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறை மூலமாக ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கானஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனா்.
அதன்படி, யாகசாலை பூஜைகள் நவம்பா் 27-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடா்ந்து, திங்கள்கிழமை (டிச.1) காலை மகாபூா்ணாஹூதி நடைபெற்று, புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாசாரியா்கள் எடுத்து வந்து, கோயிலின் கலசத்திற்கு வாா்த்து, மகா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனா்.
தொடா்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலா் எம். முருகையன் ஆய்வாளா் ராஜேந்திர பிரசன்னா மற்றும் திருப்பணிக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது