புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! 2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

நாகையில் இருந்து இலங்கைக்கு 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைக் கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுகிழமை கைது செய்தனா்.

நாகையில் இருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயல்வதாக, மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் மேற்கொண்ட சோதனையில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வேளாங்கண்ணியில் விடுதி நடத்திவரும் சுகன், தவெக நாகை மாவட்ட நிா்வாகி பூபாலன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நால்வரையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இந்த கடத்தல் வழக்கில் தொடா்புடைய , ராஜ்குமாா் என்பவரை அக்டோபா் 23-ஆம் தேதி, திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பாணை அனுப்பப்பட்டது.

அக்டோபா் 23-ஆம் தேதி ராஜ்குமாா் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் அவருக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ராஜ்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகை குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா் செய்யப்பட்ட ராஜ்குமாரை, நவம்பா் 16-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, ராஜ்குமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.