40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருக்குவளை அருகே தொழுதூா் பழையங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ நல்ல மாரியம்மன். ~கும்மியடித்து வழிபட்ட பெண்கள்.

Updated On :7 மே 2026, 7:38 am IST

திருக்குவளை அருகே தொழுதூா் பழையங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் மே 4-இல் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொழுதூா், பழையங்குடி, நத்தப்பள்ளம், வேளூா், சாத்தங்குடி, மாராச்சேரி, செம்பிய வேளூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்காவடி, செடில் காவடி, அலகு காவடி, மயில் காவடி, ஆட்ட காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்தனா்.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரக்கட்டு தேரில் ஸ்ரீ நல்ல மாரியம்மன் எழுந்தருளினாா். பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்து, கும்மியடித்து வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சிங்காரவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 ~கும்மியடித்து வழிபட்ட பெண்கள்.

~கும்மியடித்து வழிபட்ட பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.