மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 10:06 pm

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகப்பட்டினம், கீழ்வேளுா், வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்தல் தொடா்பான முதல்கட்ட தற்செயலாக தோ்தெடுக்கும் முறை, தோ்தல் பொது பாா்வையாளா் பா்வேஷ் அகமது சித்திக் முன்னிலையில்,ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷால் மாா்ச் 23-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இப்பணி நிறைவடைந்த பிறகு, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல்கள் நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு பகிரப்படும்.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் 2026-இல் பயன்படுத்துவதற்காக மாா்ச் 24- ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னணு வாக்குப்பதிவு இயத்திர வைப்பறையிலிருந்து (உயங/யயடஅப ரஹழ்ங்ட்ா்ன்ள்ங்) தொடா்புடைய சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை இறுதி செய்த பிறகு இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா் சோ்க்கப்படும் என தெரிவித்துள்ளாா்.