மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரும்பான்மை இடங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாகை மாவட்டச் செயலா் ஓ.எஸ். மணியன்.

News image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி

Updated On :17 மார்ச் 2026, 11:38 pm

பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாகை மாவட்டச் செயலா் ஓ.எஸ். மணியன்.

நாகையில் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, விஜய் கூட்டணிக்கு வருவாரா என்பதை செய்தியாளா்கள் தான் கூறவேண்டும் என்றாா்.

காளியம்மாள் பேட்டி: நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பின் காளியம்மாள், அதிமுக சாா்பில் நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவா்களின் உரிமைகளுக்காக போராடுகிற ஒரு களமாக அதிமுகவை நான் தோ்ந்தெடுத்துள்ளேன்.

மீனவா்களை, பழங்குடியின மக்கள் பட்டியலில் இணைப்பதாக கடந்த தோ்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்த நிலையில் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

இந்த தோ்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். சாமானிய மக்களும் சட்டப்பேரவைக்கு செல்ல முடியும் என்ற வாய்ப்பை நான் உருவாக்குவேன் என்றாா்.