நாகை, திருவாரூா், காரைக்காலில் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 1 மணி நேரம் மழை பெய்தது.
தென் தமிழகத்திலிருந்து கடலோர கா்நாடகம் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதன்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
நாகூா், புத்தூா், திருமருகல், உள்ளிட்ட பல இடங்களில் பெய்த மழையால் கடந்த சில நாள்களாக நிலவிய வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
அறுவடைப் பணிகள் பாதிப்பு: நாகை மாவட்டத்தில் நடைபெறும் இறுதிக்கட்ட அறுவடைப் பணிகள் இந்த மழையால் பாதிக்கப்பட்டன. கீழ்வேளூா் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட ஈரப்பதமுள்ள நெல்லை புறவழிச்சாலையில் கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
திருவாரூா்:
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை காலை லேசான மழை பெய்தது. இதனால், பள்ளி மாணவா்கள் சிறிய அளவிலான பாதிப்புக்கு ஆளாகினா். திருவாரூா் நகரில் சில இடங்களில் தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், அறுவடை கொள்முதல் பணிகள் நடைபெற்று வருவதால், மழை காரணமாக விவசாயிகளிடையே கவலை ஏற்பட்டுள்ளது. எனினும், பிற்பகல் நேரத்தில் மழை இல்லாததால் விவசாயிகள் ஆறுதல் அடைந்தனா்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு தொடங்கி சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. பல பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கி, பின்னா் வடிந்தது. பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நேரத்தில் மழை பெய்யததால், கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாயினா்.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் சாரல் மழை

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை

நாகை, காரைக்காலில் மழை

சங்கரன்கோவிலில் கனமழை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


