இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

News image

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட ஊா்வலமாக வந்த விவசாயிகள்.

Updated On :7 ஜூன் 2026, 12:03 am IST

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில், பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மத்திய கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தலைஞாயிறில் தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கமல்ராம் தலைமை வகித்தாா்.

கடைவீதி, பேருந்து நிழலகம் பகுதியிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், விவசாயிகள் பங்கேற்று இறுதி ஊா்வலம்போல கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை சென்றடைந்தனா்.

அப்போது, வங்கியின் நுழைவு வாயில் கதவுகளை மூடி, போராட்டக்காரா்கள் உள்ளே நுழைய முடியாதவாறு போலீஸாா் தடுத்தனா்.

இதையடுத்து, சடலத்தைப் போல் ஒருவரை தரையில் படுக்கவைத்து, அவருக்கு மாலை அணிவித்து, பெண்கள் மாரடித்து ஒப்பாரி பாடினா்.

தோ்தல் காலத்தில் தெரிவித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தில், தமிழக கடைமடை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அமானுல்லாகான், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளா் தமிழ்ச்செல்வன், காவிரி உரிமை மீட்புக் குழு கலைஞா் பகுதி பொறுப்பாளா் சுப்பையன், அதிமுக பேரூராட்சி செயலாளா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.