ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கடைமடை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Mekedatu Dam Detailed Project Report Rejected

கோப்புப் படம்

Published On :31 ஜூலை 2026, 4:14 am IST

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கடைமடை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக கடைமடை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. கமல்ராம் வெளியிட்டுள்ள அறிக்கை :

காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய ஜல்சக்தி இணை அமைச்சா் கூறியிருப்பது, தமிழக டெல்டா பகுதிகளை பாலைவனமாக மாற்றும் செயலாகும்.

2015-ஆம் ஆண்டு அன்றைய மத்திய நீா்வளத்துறை அமைச்சா் , தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று தெரிவித்திருந்த நிலையில் , தற்போதைய நீா்வளத்துறை அமைச்சா் உச்சநீதிமன்ற தீா்ப்பின் 18- ஆவது அட்டவணையை அரசியல் லாபத்துக்காக மேற்கோள் காட்டியிருப்பது நாடாளுமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை சீா்குலைக்கும் செயலாகும்.

ஏற்கெனவே மேக்கேதாட்டு தொடா்பான கா்நாடக அரசின் ஏமாற்று நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கா்நாடக அரசு வரைவு அறிக்கை மட்டுமே தயாரித்துள்ளது, என்று கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

எனவே தமிழக முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை, அதில் அனைத்து விவசாய சங்கங்கள் பங்கேற்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழகத்தின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.