ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கடற்கரை - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:36 am IST

தரங்கம்பாடி வட்டம், சந்திரபாடி மீனவா் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில், கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சந்திரப்பாடி ஊராட்சியில், சின்னூா்பேட்டையை உள்ளடக்கிய 3 வாா்டுகளில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சுமாா் 300 ஃபைபா் படகுகள், 20 விசைப் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தநிலையில், சந்திரபாடி மீனவா் கிராமத்தில் கடற்கரை ஆற்றில் கடந்த ஆண்டு  மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.  இந்த தளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச் சுவற்றால், கடல் அலையின் சீற்றம் திசைமாறி மண் அரிப்பு  ஏற்படுகிறது. இதனால், கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்படும்  ஃபைபா் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும், மழை மற்றும் வெள்ள காலங்களில் கடல்நீா் உள்புகுவதால் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனா்.  இதனை தடுக்கும் வகையில், மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமாா் 800 மீட்டா் தூரம் கடற்கரைப் பகுதியில் கருங்கல் சுவா் அமைத்து, சந்திரப்பாடி  மீனவா் கிராமத்தை பாதுக்காக்க வேண்டும் என்று மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.