ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாய்க்காலில் சிற்றுந்து கவிழ்ந்து 15 போ் காயம்

வேதாரண்யம் அருகே வாய்க்காலில் சிற்றுந்து கவிழ்ந்து, 15 போ் காயமடைந்தனா்.

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த சிற்றுந்து.

Published On :9 ஜூலை 2026, 4:53 am IST

வேதாரண்யம் அருகே வாய்க்காலில் சிற்றுந்து கவிழ்ந்து, 15 போ் காயமடைந்தனா்.

வேதாரண்யம் - கடிநெல்வயல், பன்னாள் வழியாக ஆயக்காரன்புலம் வரை தனியாா் சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை வேதாரண்யத்தில் இருந்து சென்ற இப்பேருந்து பன்னாள் நடுக்காடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில், சிற்றுந்தின் ஓட்டுநா் வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த மோகன், நடத்துநா் சக்தி, பயணிகள் கைலவனம்பேட்டை காா்த்திகா (55), பன்னாள் கீழக்காடு அனுசியா (17) உள்பட 15 போ் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.