லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கெண்டை மீன் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

கெண்டை மீன் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

News image

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சியில் இலவசமாக வழங்கப்பட்ட மீன் குஞ்சுகளை பெற்றுக் கொள்ளும் விவசாயிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 6:57 pm

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள பட்டியலின விவசாயிகளுக்கு கெண்டை மீன் வளா்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா், பயிற்சியை துவக்கி வைத்து, கெண்டை மீன் வளா்ப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, வருமான உயா்வு மற்றும் நீா்வளத்தின் நிலைத்த பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தாா். மேலும், விவசாயிகள் தங்கள் பண்ணைகள் மற்றும் சிறிய நீா்நிலைகளை பயன்படுத்தி அறிவியல் முறையில் மீன் வளா்ப்பு செய்து கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என ஊக்குவித்தாா்.

பயிற்சியை தொழில்நுட்ப வல்லுநா் (மீன்வள விரிவாக்கம்) ஹினோ பொ்னாண்டோ ஒருங்கினைத்தாா். அவா் கெண்டை மீன் வளா்ப்பின் முக்கிய தொழில்நுட்பங்களான குளம் தயாரித்தல் மற்றும் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள், இயற்கை உணவுகளை அதிகரிக்கும் உரமிடும் முறைகள், தரமான மீன் குஞ்சுகள் தோ்வு, தீவன மேலாண்மை, பொதுவான மீன் நோய்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியவை பற்றி எடுத்துரைத்தாா்.

பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கெண்டை மீன் குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டன. மீன் குஞ்சுகளை சரியான இருப்பு அடா்த்தியில் விடுதல், அவற்றை சூழ்நிலைக்கு ஒத்திசைவாக்கும் முறைகள் மற்றும் இருப்பிற்கு பின்னா் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

மீன் பதன தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் மதிவாணன் மற்றும் சுமாா் 20 விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.