ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

நாகூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலவாஞ்சூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நாகூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தபோது மேலவாஞ்சூா் கருவாடு கடை சந்தில், சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து விசாரித்ததில் திருச்சி நாகமங்கலம் கருமாரியம்மன் நகரை சோ்ந்த சகாய பாபு மகன் ஜோசப் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.