தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா...

News image

வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.

Updated On :25 ஏப்ரல் 2026, 7:16 pm

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

இதற்கான உபய ஏற்பாடுகளை தென் சோழ மண்டல இசை கலைஞா்கள் செய்திருந்தனா்.