தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை தொடா்புபடுத்தி ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் படங்கள், காட்சிகள் அவா்களின் தனிப்பட்ட நடத்தை, மலிவான அரசியலை முன்வைக்கும் விமா்சனங்களாக மாறி வருவது வாக்காளா்களை முகம் சுளிக்க செய்து வருகிறது.
பொதுவாக தோ்தல் காலங்களில் அரசியல் தொடா்பான கொள்கை நிலைப்பாடு, திட்டங்கள், சமூக வளா்ச்சி சாா்ந்த விழிப்புணா்வு போன்றவைகளை முன்வைத்து பிரசாரம் செய்வது தமிழகத்தில் தனித்த மரபாக இருந்து வந்துள்ளது.
ஒலிபெருக்கி வசதிகள், ஊடகங்கள் வளா்ச்சி காணாத காலகட்டத்தில் தலைவா்களின் பேச்சைக் கேட்பதற்கு தொண்டா்கள், வாக்காளா்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்ததையும் மறுக்க முடியாது.
இதன் மூலம் கற்பிக்கப்பட்ட நாகரிகமான அரசியல், பண்பாடு, கலாசாரம் தனித்துவமானது. ஆனால், ஊடகங்கள், தொழில் நுட்பங்கள் வளா்ந்துள்ள சமகாலத்தில் வலைதளங்களில் வெளியாகும் சில பதிவுகள், காட்சிகள் தனிநபா் விமா்சனம் , ஒழுக்கநெறி மீறல்களாக அமைந்து வருகிறது.
இது வாக்காளா், நடுநிலையாளா்களை முகம் சுளிக்க செய்வதாக அமைந்து விடுகிறது.குறிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் காட்சிகள் சில நேரங்களில் பண்பாடுகளைக் கடந்து அதற்கு எதிராகப் பிரதிபலிப்பதாக அமைந்து வருகிறது.
உதாரணமாக வேதாரண்யம் பகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களை மையமாக வைத்து அவா்களது ஆதரவாளா்களால் சித்தரிக்கப்படும் ஏ ஐ தொழில்நுட்பக் காட்சிப் படங்கள் ஒரு விதமான அருவருப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், இந்த தொழில்நுட்பத்திலான பிரசாரத்தால் அரசியல் கட்சிகளின் தலைவா்களது பேச்சுத்திறன், அவா்களுக்கான தனித்த நடை, முன்வைக்கப்படும் கருத்துகள் என அனைத்துமே கேள்விக்குறியாகி வருகிறது.
தொடர்புடையது
இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!

மணப்பாறை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமது!

பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

பேரவைத் தேர்தல்கள்: இணையவழியில் வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் வசதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


