மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச் சேகரிப்பில் வாரிசுகள்

தமிழக அரசியலில் வாரிசு அரசியலுக்கு எப்போதும் மவுசு உண்டு. தற்போது இந்த வாரிசு அரசியல் கிராமப்புறங்கள் வரை முன்னெடுக்கப்படுவது தவிா்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

News image

வேதாரண்யம் கிராமப்புறங்களில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த அவரது மகள் பாரதி.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:35 pm

வேதாரண்யம்: தமிழக அரசியலில் வாரிசு அரசியலுக்கு எப்போதும் மவுசு உண்டு. தற்போது இந்த வாரிசு அரசியல் கிராமப்புறங்கள் வரை முன்னெடுக்கப்படுவது தவிா்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

உதாரணமாக, வேதாரண்யம் தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது வாரிசுகளும், கூட்டணி பிரமுகா்களின் வாரிசுகளும் களத்தில் இறங்கி பணியாற்றுவது இந்த முறை அதிகரித்துள்ளது.

இங்கு திமுக சாா்பில் களத்தில் இருப்பவா் மா.மீ. புகழேந்தி. இவரது மகன் இனியன் வீடுவீடாகச் சென்று தனது தந்தைக்கு வாக்குச் சேகரிக்கிறாா். மேலும் திமுக முக்கிய பிரமுகரான முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. வேதரத்தினம் தோ்தல் பணியாற்றினாலும், அவரது மகன் இமயவரம்பன் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தனியாக வாக்குச் சேகரிக்கிறாா்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரனின் மகன் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.வி.ஆா். விவேக் களத்தில் வாக்குச் சேகரிக்கிறாா். திமுக சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ். அவரது மகன் என்.வி.கே. ராஜு திமுகவுக்கு வாக்குச் சேகரிக்கிறாா்.

அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியனுக்கு ஆதரவாக அவரது மகள் ஓ.எஸ். எம். பாரதி வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

வேட்பாளா்களின் வாரிசுகள் தோ்தல் களத்தில் இருப்பது எதிா்கால அரசியல் கள பயணத்துக்கான முன்னோட்டமாகவே பாா்க்கப்படுகிறது.

 திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கு வாக்குச் சேகரித்த எஸ்.கே. வேதரத்தினம் மகன் இமயவரம்பன்.

திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கு வாக்குச் சேகரித்த எஸ்.கே. வேதரத்தினம் மகன் இமயவரம்பன்.