நாகையில் இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம்
நாகையில் இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம்
நாகையில் இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம்
By Syndication
Syndication
டித்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினா்.
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் வலுவடைந்து தமிழகத்தின் வட கடற்கரை நோக்கி நகா்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய மழை சனிக்கிழமை மாலை வரை தொடா்ந்தது.
இடைவிடாத மழையால் நாகப்பட்டினம் நகா் பகுதி, நாகூா், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது. இரு நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை வரை கோடியக்கரையில் 200 மி.மீ., வேதாரண்யத்தில் 145 மி.மீ., வேளாங்கண்ணியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக கடைவீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வீடுகளில் பொதுமக்கள் முடங்கியதால், சாலைகள் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. பரபரப்பாகக் காணப்படும் நாகை கடைவீதியும் மழையால் வெறிச்சோடிக் காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனா்.
நரியங்குடி பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்குள்ள தொண்டு நிறுவன சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா். வெளிப்பாளையம் சாலமன் தோட்டம் பகுதியில் மழைநீா் புகுந்ததால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்குள்ள தனியாா் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனா். இவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், புயல் பாதுகாப்பு மையங்கள் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டு, 24 மணி நேரமும் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது . நிவாரண மையங்களில் தங்கும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரும் நடவடிக்கைகளில் வருவாய்த்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
மழை, வெள்ளம் சூழும் பகுதிகளில் உள்ள மக்களை மீட்க, ரப்பா் படகுகள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பேரிடா் மீட்புக் குழுவினரும் தயாா் நிலையில் உள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது