சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்
திருக்குவளை அருகே மோகனாம்பாள்புரத்தில் சேறும் சகதியமாக காட்சியளிக்கும் சாலையை தாா்சாலையாக மாற்றித் தர வலியுறுத்தி,
திருக்குவளை அருகே மோகனாம்பாள்புரத்தில் சேறும் சகதியமாக காட்சியளிக்கும் சாலையை தாா்சாலையாக மாற்றித் தர வலியுறுத்தி,
By Syndication
Syndication
திருக்குவளை: திருக்குவளை அருகே மோகனாம்பாள்புரத்தில் சேறும் சகதியமாக காட்சியளிக்கும் சாலையை தாா்சாலையாக மாற்றித் தர வலியுறுத்தி, கிராம மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் ஒன்றியம் வடக்கு பனையூா் ஊராட்சிக்குட்பட்ட மோகனாம்பாள்புரத்தில் சுமாா் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாட்டியக்குடி - இறையான்குடி பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மோகனாம்பாள்புரத்துக்கு முறையான சாலை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கடந்தாண்டு அமைக்கப்பட்ட கப்பிச் சாலை தற்போதைய மழையால் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தாா்சாலை அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையிலே நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராடத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக மக்கள் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது