எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தாம்பரம்-ராமேசுவரம் சிறப்பு ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்

தாம்பரம்-ராமேசுவரம் வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நேரத்தில் வியாழக்கிழமை (அக். 3) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் தெரிவித்துள்ளாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :3 அக்டோபர் 2024, 12:53 am

Din

தாம்பரம்-ராமேசுவரம் வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நேரத்தில் வியாழக்கிழமை (அக். 3) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாம்பரத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் (06103) வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமை என வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரயில் பயண நேரத்தில் வியாழக்கிழமை (அக்.3) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 11.15 சென்றடையும். ஆனால் இனி திருவாரூருக்கு இரவு 10.50 க்கும் சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கும், திருத்துறைப்பூண்டியில் இரவு 11.25க்கும், முத்துப்பேட்டையில் இரவு 11.48 க்கும், அதிராம்ப்பட்டிணத்தில் இரவு 11.59 க்கும், பட்டுக்கோட்டையில் மறுநாள் அதிகாலை (நள்ளிரவு) 12.16 க்கும், காரைக்குடியில் அதிகாலை 2.20 மணிக்கும், சிவகங்கையில் அதிகாலை 3 மணிக்கும், மானாமதுரையில் அதிகாலை 4 மணிக்கும் புறப்படும். அதிகாலை 4.55 மணிக்கு ராமநாதபுரத்திற்கு சென்றடையும் என தெரிவித்துள்ளாா்.