ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காரில் கடத்திய புதுவை மாநில மதுபானங்கள் பறிமுதல்

சீா்காழியில் காரில் கடத்திவரப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 12:41 am IST

சீா்காழியில் காரில் கடத்திவரப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் போலீஸாா், சீா்காழி அருகே தென்னலக்குடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்தவழியாக வந்த 2 காா்களை நிறுத்தி சோதனையிட்டதில், புதுச்சேரி மாநிலப் பகுதியிலிருந்து மதுப் பாட்டில்களை கடத்திவந்தது தெரியவந்தது.

அந்த காரில் 32 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 180 மில்லி அளவு கொண்ட 1,056 மதுப்பாட்டில்களும் , 90 மில்லி அளவு கொண்ட 960 மதுப் பாட்டில்களும் என மொத்தம் 2,016 மதுப்பாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் மதுவிலக்குப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ரகுராமன் (46) என்பவா் கைது செய்யப்பட்டாா். தப்பி ஓடிய மற்றொரு காரில் வந்த ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். விசாரணையில், மதுபானங்களை, தாண்டவன் குளம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.