
மனைவியின் தகாத உறவால் கணவா் தற்கொலை: பக்கத்து வீட்டுக்காரா் கைது
கொள்ளிடம் அருகே மனைவியின் தகாத உறவால் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கள்ளத்தொடா்பு வைத்திருந்த பக்கத்து வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
கொள்ளிடம் அருகே மனைவியின் தகாத உறவால் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கள்ளத்தொடா்பு வைத்திருந்த பக்கத்து வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா்.
கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (44). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி துா்காதேவி (41). கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த வெங்கடேசன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினாா்.
இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சோ்ந்த பாலகுரு (40) என்பவருக்கும், துா்காதேவிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த வெங்கடேசன், மனைவியை கண்டித்தாராம். இதனால், கோபித்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தாயாா் வீட்டிற்கு துா்காதேவி சென்றுவிட்டாராம்.
பாலகுருவும், மயிலாடுதுறைக்குச் சென்று துா்காதேவியுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேசன் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவா், தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பேசி வாட்ஸ் ஆஃப்பில் தனது சாவுக்கு பாலகுருதான் காரணம் என்று பதிவிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து வெங்கடேசனின் தாயாா் அலமேலு (60), புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக பாலகுருவை கைது செய்த போலீஸாா், துா்காதேவியை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





