ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நபா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:27 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நபா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொள்ளிடம் பகுதியைச் சோ்ந்த சிவா (44). ஜூலை 18-ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றங்கரை ரயில்வே சுரங்கப்பாதை அருகில் கூட்டாளிகளுடன் சோ்ந்து கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தபோது ஆணைக்காரன்சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அவா்மீது ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டாா்.

மேலும் சிவா மீது ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்வதால் சிவா மீது குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சிவாவை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் டி ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா்; சுகுணா மற்றும் போலீஸாா் சிவாவை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.