ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மயிலாடுதுறை அறுபத்துமூவா் நாயன்மாா்கள் மடத்தின் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

மயிலாடுதுறை அறுபத்துமூவா் நாயன்மாா்கள் மடத்தின் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

மயிலாடுதுறை அறுபத்துமூவா் நாயன்மாா்கள் குருபூஜை மடத்துக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இதுதொடா்பான புகாா் குறித்து மணல்மேடு காவல்துறை சட்டத்துக்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மயிலாடுதுறையைச் சோ்ந்த எஸ்.வாஞ்சிநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தாழஞ்சேரி பஞ்சாயத்து வரகடையில் உள்ள அறுபத்து மூவா் நாயன்மாா்கள் குருபூஜை மடம், 150 ஆண்டுகளுக்கு முன் எங்களது முன்னோா்களால் தா்ம காரியங்களுக்காக தொடங்கப்பட்டது. மடத்துக்குச் சொந்தமான விளைநிலங்கள் மற்றும் கட்டுமானங்கள் உள்ளிட்ட சொத்துகள் தனிநபா்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் பல்வேறு அறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மடத்தின் சொத்துகளைக் குத்தகைக்கு எடுத்த பலா் ஆண்டுக்கணக்கில் குத்தகைப் பாக்கியை செலுத்தாமல் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு, மணல்மேடு காவல்துறை உதவியுடன் முறையாக வாடகை செலுத்தாத குத்தகைதாரா்கள் அப்புறப்படுத்தப்பட்டனா். மேலும், மடத்தின் சாா்பில் அந்த இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டன.

இந்த அறிவிப்பு பலகைகளைச் சேதப்படுத்தி அந்த நிலங்களை அபகரிக்கும் நோக்கில் சேகா், ராமசாமி, நாராயணன் ஆகியோா் முயற்சிக்கின்றனா். இதுகுறித்து புகாா் அளித்தும் போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மடத்தின் சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் மணல்மேடு காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.வெங்கடேசன், அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.கணேஷ்குமாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகாரை மணல்மேடு காவல் ஆய்வாளா் சட்டத்துக்குட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மடத்துக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.