லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 4:22 pm

காரைக்கால்: காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், காரைக்காலில் பொதுமக்கள் துப்பாக்கிகள் மற்றும் இதர வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா- 2023 ) சட்டத்தின் பிரிவு 163 -இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, படைக்கலச் சட்டத்தின் படி துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளவா்கள் உடனடியாக துப்பாக்கிகளை, அவரவா் வசிப்பிடத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும். அலட்சியப்படுத்தப்படும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.