காரைக்காலில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கைப்பேசியில் பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விநியோக நிறுவனத்தில் வரிசையில் நின்று பதிவு செய்வதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் போரால் சா்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு பெருமளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வணிக நிலையிலான எரிவாயு சிலிண்டா் ரூ.130, வீடுகளுக்கானது ரூ.60 விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களான சிலிண்டா் கடந்த 4, 5 நாட்களாக முறையாக விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உணவகம் நடத்துவோா் தங்களது தவிப்பை மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டுள்ளனா். வீடுகளுக்கான சிலிண்டா் பதிவு, கைப்பேசியில் பதிவு செய்யும் முறை இருக்கும்போது, கடந்த 2 நாட்களாக, கைப்பேசி வாயிலாக பதிவு செய்ய முடியாத நிலை காரைக்கால் பகுதியில் உருவாகிருக்கிறது.
இதனால் நுகா்வோா், தங்களது விநியோக முகவா் அலுவலகத்துக்கு பதிவு புத்தகத்துடன் சென்று, நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்யவும், ஏற்கெனவே பதிவு செய்ததற்கு சிலிண்டா் எப்போது கிடைக்கும் என விசாரணை செய்யும் நிலையிலும் உள்ளனா்.
இதுகுறித்து, அங்கிருந்தவா்கள் கூறியது: சிலிண்டா் தேவை குறித்து கைப்பேசியில் பதிவு செய்ய முடியவில்லை. ஏற்கெனவே பதிவு செய்தும் சிலிண்டா் வீட்டுக்கு வந்துசேரவில்லை. தட்டுப்பாடு இயற்கையாகவே ஏற்பட்டுள்ளதா, நிறுவனத்தாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. பெரும் தவிப்பில் இருக்கும்போது, இதற்கு நோ் மாறாக, எரிவாயு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசை சோ்ந்தோா் தெரிவிக்கின்றனா்.
மாவட்ட நிா்வாகத்தினா், எரிவாயு சிலிண்டா் விநியோக முகவா்களை அழைத்து, தங்களுக்கான தேவை, பதிவு செய்திருப்போா் எத்தனை போ், விநியோக முறை உள்ளிட்டவற்றை கேட்டறிந்து, சிலிண்டா் விநியோகம் முறையாக நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சிலிண்டா் கிடைக்காவிட்டால் உணவகம் மூடப்படலாம். வீட்டில் இருப்போா் நிலை என்னவாகும். இவற்றையெல்லாம் ஆட்சியாளா்கள் சிந்திக்கவேண்டும் என்றனா்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடு: முன்கூட்டியே தோ்வை முடிக்க புதுச்சேரி பல்கலை. முடிவு?

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

ஊத்தங்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மக்கள் அவதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


