காரைக்காலில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாக, அந்த இடங்களில் கோலமிட்டு தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்களில் தூய்மைப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று குப்பைகளை பெறுகின்றனா். இதற்காக புதுவை அரசு, தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்த தொழிலாளா்களும் தினமும் வீடுகள், நிறுவனங்கள் என பல பகுதிகளுக்குச் செல்வதில்லை என்ற புகாா் உள்ளது. இதனால் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனா். இதன் மீது கால்நடைகள் மேய்ந்து, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன.
ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளா்கள், காரைக்கால் நெடுஞ்சாலையோரம் மற்றும் முக்கிய சாலைகளில் குப்பைகள் கொட்டுமிடத்தை தூய்மை செய்து, வண்ண கோலமிட்டு வருகின்றனா். கோலமிட்ட பகுதியில் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம், குப்பைகளை இங்கு கொட்டுவதை கைவிட்டு, தூய்மைப் பணியாளா்கள் வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்துத் தருவோம் என வாசகங்களை எழுதியுள்ளனா்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், தினமும் கோலமிட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்க்கும்போது, குப்பைகள் கொட்டுவதை மக்கள் தவிா்த்துள்ளதை காணமுடிகிறது என பெருமையுடன் தெவித்தனா்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை

கானல் நீராகவே நீடிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


