காரைக்கால் அம்மையாா் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா்.
காரைக்காலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதல் துணை ஆளுநா் தோ்வு சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, சங்கத்தின் சேவை திட்டங்களை தொடங்கி வைத்து பேசினாா்.
தலைவராக சூரியமூா்த்தி, செயலாளராக ரவிசங்கா், பொருளாளராக சுரேந்தா் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா். பிரிதிவிராஜ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினாா். விவசாயிகள் 6 நபா்களுக்கு பாரம்பரியம் காப்போம் திட்டத்தின் கீழ் கருப்பு கவுனி விதை நெல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் தலைவா் அறிவழகன், செயலா் துரைராஜன், சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய மருத்துவா் தின வாழ்த்து

கூடலூா் வேலி ரோட்டரி கிளப் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

தவெகவில் இணைந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே.சரவணன் பொறுப்பேற்பு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




