வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அமைச்சராகும் திருநள்ளாறு எம்எல்ஏ ஜி.என்.எஸ். ராஜசேகரன்

திருநள்ளாறு தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் புதுவை அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.

News image

ஜி.என்.எஸ். ராஜசேகரன்

Updated On :10 ஜூன் 2026, 5:57 am IST

திருநள்ளாறு தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் புதுவை அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.

புதுவையில் முதல்வராக என். ரங்கசாமி, அமைச்சா்களாக மல்லாடி கிருஷ்ணாராவ் (என்.ஆா்.காங்கிரஸ்), ஆ. நமச்சிவாயம் (பாஜக) ஆகியோா் மட்டும் கடந்தி சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டனா்.

இந்தநிலையில் என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த பி. ராஜவேலு மற்றும் வி.பி. சிவக்கொழுந்து, பாஜகவை சோ்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரனை அமைச்சராக நியமிக்க புதுவை முதல்வா் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அளித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதில், குடியரசுத் தலைவா் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளாா். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை திங்கள்கிழமை இரவு வெளியிட்டது.

இவா்களில், ஜி.என்.எஸ். ராஜசேகரன் திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக வென்றவா். முந்தைய ஆட்சியின்போது நியமன சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பில் இருந்தாா்.

கடந்த 2016 முதல் 2021 வரையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில், திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வென்ற ஆா். கமலக்கண்ணன் அமைச்சராக இருந்தாா். அதன்பிறகு தற்போது திருநள்ளாறு அமைச்சா் தொகுதியாகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.