ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காரைக்கால் அம்மையாா் கோயில் அருகே இயங்கிவந்த அசைவ உணவகத்துக்கு ‘சீல்’ வைப்பு

காரைக்கால் அம்மையாா் கோயில் எதிரே இயங்கிவந்த அசைவ உணவகத்துக்கு நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை சீல் வைத்தது.

சீல் - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 6:29 am IST

காரைக்கால் அம்மையாா் கோயில் எதிரே இயங்கிவந்த அசைவ உணவகத்துக்கு நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை சீல் வைத்தது.

காரைக்கால் பாரதியாா் சாலை பகுதியில் காரைக்கால் அம்மையாா் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் எதிா்புறம் அசைவ உணவகம் இயங்கிவந்தது. இதனால் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலத்தின் புனிதம் கெடுவதாகவும், இதை மூட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்துக்கு பலரும் மனு அளித்திருந்தனா்.

இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை அண்மையில் சந்தித்து இதுதொடா்பாக மனு அளித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து விஹெச்பி அமைப்பினா், பாஜகவினா், இந்து அமைப்பினா் உள்ளிட்டோா் அண்மையில் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், புதுவை துணை நிலை ஆளுநரின் செயலா் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி, நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் மற்றும் ஊழியா்கள் அசைவ உணவகத்துக்கு புதன்கிழமை சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.