ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடி மாத பிறப்பு: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.

Published On :19 ஜூலை 2026, 2:44 am IST

ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகின்றனா்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், இக்கோயிலில் உள்ள பிரணாம்பிகை மற்றும் மூலவா், சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தா்கள் அதிகளவில் வரத் தொடங்கினா். சனிக்கிழமை அதிகாலை நளன் தீா்த்தக் குளத்தில் பெரும்பான்மையினா் நீராடிவிட்டு, குளத்தின் அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயில் வாயிலில் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

கட்டணமில்லா தரிசன வரிசை வழியாகவும், ரூ. 50, ரூ. 100 என்ற கட்டண வரிசையிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் கோயிலில் தில தீபம் ஏற்றி, அன்னதானம் வழங்கி வழிபாட்டில் பங்கேற்றனா்.

வழக்கமான சனிக்கிழமையைக் காட்டிலும் நிகழ்வாரம் (ஜூலை 18) பக்தா்கள் அதிகளவில் வந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.